என்று சுதந்திரம் பெறுவோம்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று , குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
நாட்டில் தினமும் உணவின்றி தவிக்கும் லட்சகணக்கான அனாதை குழந்தைகளின் பசி தீருவது என்று?
பெண்கள் நாட்டின் கண்கள் என்று இசைபாடி விட்டு வீட்டில் அவர்களை வசைபாடுவதை நிறுத்துவது என்று?
குழந்தைகளுக்கு கல்வி கொடுக்காமல் தொழிலாளிகளாய் துன்புறுத்தும் காலம் முடிவது எப்போது?
பெண்கள் என்றாலே அனுபவிக்கும் உல்லாசப்பொருள் என்னும் கேவலமான மனநிலை மாறிடுவது என்று?
பெற்றோர்களை அவர்களது வயோதிக பருவத்தில் விரட்டி அடிப்பது , முதியோர்கள் இல்லம் கடத்துவது இவை முடிவது என்று?
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, வெற்றிலை பீடாவை துப்புவது , காறி உமிழ்வது போன்ற சுகாதாரமற்ற செயல்களை நாம் நிறுத்துவது என்று?
பொழுதுபோகவேண்டும் என்று அக்கப்போர் அடித்து பிறரின் நேரத்தையும் வீணாக்கும் காலம் முடிவது என்று?
நாம் உயிர் வாழக்காரணமாக இருக்கும் இயற்கை அன்னையை மிதித்து அழிக்கும் காலம் தீருவது என்று?
லஞ்சம், ஊழல் என்ற அசுரர்கள் ஒழிந்து, நேர்மை, வாய்மை என்னும் தேவதைகளாக மாறிடும் நாள் என்று?
அந்த நாள் என்று நம் இல்லங்களிலும் மாநிலங்களிலும் நாட்டிலும் மலர்கிறதோ அந்த நாளே நாம் உண்மையான சுதந்திரம் பெற்றிடும் நாள் !

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Aug-23, 6:17 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 87

மேலே