“வான்புகழ் வள்ளுவமே சான்று” - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சோழவந்தா னூரின்வாழ் சொக்கத்தங் கம்போலே
தோழமை யோடென்றுந் தொண்டுசெய்(து) – ஆழித்தேர்
போன்றனை வர்நெஞ்சிற் போற்றநின்றார் கன்னியப்பர்
“வான்புகழ் வள்ளுவமே சான்று!”

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Aug-23, 6:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே