சுனைநீ ரருந்தும் சுவைத்து - நேரிசை வெண்பா

இருவிகற்ப நேரிசை வெண்பா

கானல்நீர் கண்ட களிப்பில் கடிதுசென்ற
மானுந் துவண்டு மனத்துயர் - ஆனதே;
ஏனைய மான்களோ ஏக்கமும் நீங்கச்
சுனைநீ ரருந்தும் சுவைத்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Aug-23, 2:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே