அவளும் நிலவும்
உன்னை நான் கண்ணே முழுமதியோடு
ஒப்பிடவா மதிபோல் நீயும் உந்தன்
விழிப்பார்வையால் என்னுள்ளத்தில் தன்னொளி
பெருக்கி என்னை ஆட்கொள்கின்றாய் அந்த
நிலவைக் காட்டிலும் நீஅழகு நங்கை
ஏனெனில் களங்கம் ஏதுமில்லையே உன்முகத்தில்