பெண்களைப் போற்ற எண்ணங்களை சீராக்கு

பெண்களைப் போற்ற
எண்ணங்களை சீராக்கு
××××××××××××××××××××××

ஆண்களுக்கு நிகரானவள்
ஆண்டவனுக்கு நகலானவள்/
அன்பில் நிழலானவள்
அறத்தில் நேர்த்தியானவள்/

அடுப்பூதும் பெண்ணு
ஆகயத்தில் பறந்தும்/
ஆணாதிக்கத்தால் பூவாக
அடிமையாக நசுக்குவதேனோ/

அணைத்து துறையிலும்
அதிகாரத்தில் உயர்ந்தபின்னும்/
மாந்தளிர் பெண்சிசுவை
அரளிக்கு உரமிடலாமோ/

குடும்பத்தின் தியாக
குத்துவிளக்கை இழிநிலையில்/
குளிரவைத்து இருளில்
கண்ணற்றுப் போகலாமோ /

பூமி அவளாள்
புதனும் இவளாளே/
பெண்களைப் போற்ற
எண்ணங்களை சீராக்கு /

#மெய்ப்_பொருள்_காண்பது_அறிவு
#கவிஞர்_செல்வி_ஞான_அ_பா_அனுஷ்கா

எழுதியவர் : கவிஞர்_செல்வி_ஞான_அ_பா_அனுஷ்கா (26-Aug-23, 5:49 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 419

மேலே