ஆசிரியருக்கு சமர்ப்பணம்

எழுத்தில் இணைந்திட
ஏகமாய் ஏக்கம் என்னுள்
கிளர்ந்தது....

இனிதாய் அதிர்ந்தேன்
எழுத இயலுமா என்னால்
என்று,

என் முற்றுப்பெறாத
கவிதையை முதன் முறையாக
எழுதியதும்....

என்முதல் பதியம்

"சீற்றம் மிகு ஆழிப்
பேரலையாய் ஆழ்மனதும்
ஆழ்கடல் மரண அமைதியாய்
முகம் காட்டும் பெண்கள்
இயலாமை!!!
கட்டுப்படுத்தும் அங்குசம் இரண்டு,
அன்பால் தம்மை அறியாமல்
தாமாகவே பாசச்சிறையில் கட்டுண்டு
கிடப்பது
மரணத்திற்கு இணையானது!
அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு
உயிர் பயத்தால் அடங்கி
கிடப்பது
மதில் மேல் பூனை!!!"

என் தமிழ் ஆசிரியர்
"ஐ ஆர் ராஜன்"
நா சுழற்றி அவர்
உச்சரிக்கும் தமிழின்
அழகை ஆழ்ந்து
கவனிக்கும்
ஒவ்வொருவரும்
கவிஞர்
ஆகலாம்....

நிறை குறை
என்னுள் நிறைந்த
யாதும் எம்பெருமான்
ஆசிரியருக்கே சமர்ப்பணம்.....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (5-Sep-23, 10:03 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 115

மேலே