கொடுப்பார்க்குக் குறைவில்லை
கொடுப்பார்க்குக் குறைவில்லை
€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€
அள்ள அள்ள
குறையாத அன்னபாத்திரமாக
கொடுக்கும் கைகளின்
செல்வம் குறைவதில்லை
இறைக்க இறைக்க
கிணறும் சுரக்கும்
ஈகை செய்தால்
பெருகும் செல்வம்
ஏழைகளுக்கு இறங்குபவன்
இறைவனுக்கு இறங்குகிறார்
இறைக்கும் கைகளை
இறைவன் கைவிடுவதில்லை
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
ஏழைகள் இறைவனை
கொடுப்பவனில் காண்கிறான்
உண்டியல் பணத்தை
உண்டிட கொடுத்தால்
பிச்சையெடுக்கும் கூட்டம்
பாதைகளில் குறையும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்