விடியல் உன் கையில்
விடியல் உன் கையில்
□□□□□□□□□□□
தினமும் உதித்திடும்
தளராதக் கதிரவனாக/
தரையில் புதையுண்டு
தளிரும் விதையாக/
தேனீன் சுறுசுறுப்புடன்
தடாகத்தின் மீனை /
காத்திருந்து இரையாக்கும்
கொக்கின் தன்னம்பிக்கையுடன்/
கரையும் காலத்தை
கரையமைத்து தடுத்து/
எண்ணியச் செயலை
இன்றே செய்து /
விடாமுயற்சியுடன் உழைத்தால்
வறுமை இருள்நீங்கி/
விடியல் கிடைக்கும்
உன் கையால்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்