இந்து தர்மம்

இயற்கையின் துடிப்பிலெல்லாம் இறைவனைக் கண்டான் இந்து
வயலில் நளினமாய் நடனமாடும் நெற்கதிர்களில் அங்கு
வயலின் ஈரமண்ணில் புரண்டெழும் கயல்களின் துள்ளலில்
ஓடும் நதியில் ஆழ்கடலின் அலை ஓசையில்
பாடும் குயில் இசையில் ஆடும் மயில் ஆட்டத்தில்
ஓடும் மழை மேகத்தில் பசுமரத்தின் பச்சை நிறத்தில்
சிற்பி கல்லிலே வடித்த எத்தனையோ எத்தனையோ இறைவடிவதில்
தரையில் தந்தையில் குருவின் புகட்டலில் எல்லாம் இந்து
சத்தியத்தைக் கண்டான் அதைத்தான் இறைவன் என்றான்
இதுவே சத்தியம் சனாதன தர்மம் என்று விவேகானந்தர்
அன்று சிகாகோ மாநகரில் தனது சொற்பொழிவில்
பறை சாற்றினார் உலகமே மெய்மறந்து செவிகூர்ந்து
கேட்டு ஒப்புதலும் தந்திட' மெக்காலேயைப்' 'பொய்யாக்கி

இந்து தர்மம் சமத்துவம் என்றும் அழியாது
இறைவன் சத்தியம் என்றால் இதுவும் சத்தியமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Sep-23, 7:58 pm)
Tanglish : inthu tharmam
பார்வை : 65

மேலே