நாள் ஒன்று வரும்
நீ...
ஓடிய ஓட்டம் ஒரு நாள் நிற்கும்
பாடிய பாட்டும் பள்ளக்கில் ஏறும்
ஆடிய ஆட்டம் ஆறடியில் அடங்கும்
உன்னை தேடிய உறவுகள் வாடும்
உன்னை சாடிய உறவுகள் சப்பரத்தை தாங்கும்....
உன்னை நாடிய கூட்டம் கூடும்
நாள் ஒன்று வரும்....
-இந்திரா