சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 54

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 54
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்னை கோமதியின் அருள்ட்சொருபம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கொவிலில் உள்புறம்
சன்னிதானத்தின் முன் தனித் தங்கக்கொடிமரத்துடன்
தனி நந்தி பலி பீடத்துடன்
தனிக் கோவிலாக கிழக்கு நோக்கி
கோமதி அம்மன் அழகே உருவானவளாக
திருசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின்
மேல் வலது இடை நெளிந்து
வலது கையில் மலர்பாணமும்
பூச்செண்டு ஏந்தியவாளக
இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக
இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த
முகத்துடன் சர்வாலங்காரப் பூசிதையாக
கருணைப் பொங்கக் காட்சித் தருகிறாள்

பத்து தேவியர் குழுமத்தின்
பெண்மையின் சக்தியான
தாய்மை முதல் கோபம் வரை
தசமஹா வித்யா
அளவற்ற கருணையுடன்
எல்லையற்ற குரூரமும் கொண்டவளாக
திரிபுரா சுந்தரியாக காமேஸ்வரியாக
அன்னை நான்கு கரங்களில்
அங்குசம் பாசம்
கரும்பு வில்லுடன் அரூபமான
காட்சியை கண்ணால் காண இயலாது
வரத்தால் கிடைக்கும் தரிசனம் கண்டவர்கள்
வசப்பட்டு அடைந்திடுவார் எட்டுத் திறமைகளையும்

தமிழ் மாத முதல்நாள் அம்பாள்
தங்க ரத உலா நடக்கும்
திங்கள் கிழமை மலர்ப் பாவாடையும்
செவ்வாய் கிழமை வெள்ளிப் பாவாடையும்
வெள்ளிக் கிழமை தங்கப் பாவாடையும்
அம்பாளுக்கு சாத்தப்படும்

ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அம்பாளுக்கு
நவாவர்ண பூசையும் நடை பெறும்
தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும்
காலை உச்சி மாலை இரவு
நான்கு வேலை அபிஷேகத்துடன் பூஜையும்
சிறப்பு நாட்களில் சந்தனக் காப்பும் நடக்கும் ...

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Sep-23, 11:35 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 14

மேலே