நாட்டுப்புற தேவகன்னிகை
இளங்காலை வேளை சிற்றிடையாள் அவள்
பளபளக்கும் மஞ்சள் முகத்தாள் நெற்றியில்
மங்கள மங்கையர்க் குங்குமப் பொட்டு
அலங்கரிக்க பூப்பறிக்க மெல்ல நடந்துவர
எங்கிருந்தோ வந்த மேகம் சிறுதூறல்
பெய்திடவே மங்கை அவள் கட்டிய
புடவையின் மடிப்பை தென்றல் தவழ
ஆடி அசைய மழைத் தூறல்
புடவையில் பட்டு காலைக் கதிரவன்
ஒளிபட்டு அவள்மேல் அவளறியாமலே
ஒரு வானவில் அவள்மேல் அலங்கரிக்க
தேவகன்னிகையாய் காட்சி தந்தாள்
இந்த நாட்டுப்புற வடி வழகி