பஞ்சாப் நதியலை போல்காதல் உணர்வலைகள்

நெஞ்சமெனும் நீரோடையில் துள்ளி ஓடுதே
தஞ்சைக் காவிரி புனல்போலுன் நினைவலைகள்
மஞ்சள்நிற வானில் மாலைநிலாவில் சந்தித்த
பஞ்சாப் நதியலை போல்காதல் உணர்வலைகள்

தெரிந்த தகவல்கள் :

பஞ்ச + அப் = பஞ்சாப் பஞ்ச =ஐந்து அப் = நீர்
ஐந்து நீர் - ஐந்து நதி பாயும் மாநிலம் பஞ்சாப் -அவை ஜீலம், சேனாப், ரவி, சட்லஜ்,
பீஸ் .
தற்போது பஞ்சாபின் ஒரு பகுதி நம் நாட்டிலும் மற்றொரு பகுதி பாகிஸ்தானிலும்
இருக்கிறது
கர்நாடகம் காவிரி தரவில்லை என்றால் தஞ்சை விளைநிலம் வாடும்
நம் நாடு நீர் தரவில்லையானால் பாகிஸ்தான் பஞ்சாப் வாடும்

இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்ல்லாம் இடையில் வந்த பந்தமடா
----கண்ணதாசன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-23, 8:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே