நிலைக் கண்ணாடி
குழந்தைப் பருவத்திலிருந்து
உன்னை நான் பார்த்துக் கொண்டுதான்
இருக்கின்றேன் ஒரு நாள் தவறாது
நீயோ அப்படியேதான் இருக்கின்றாய்
நான்....குழந்தையாய் இல்லை இப்போது
சிறுவனாய், குமரனாய் இல்லை
உடலெல்லாம் தொய்ந்து வறண்ட
தோற்றத்தில் நரைத்த முடியுடன்
முதியோனாய்.... நீ.....நீயோ
கொஞ்சமும் மாற்றமேது மில்லாது
அன்று பார்த்த அப்படியே இருக்கின்றாய்...
உருவத்தைக் காட்டிடும் நிலைக் கண்ணாடியே
யாக்கை நிலையாமையை எடுத்துரைக்க
இறைவன் உன்னை இங்கு படைத்தானோ ?