உடல் விட்ட வேர்வைகள்
உடல் விட்ட வேர்வைகள்
॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥
உடல் விட்ட வேர்வைகள் உப்பாக/
உழைக்கும் பணத்தால் சாப்பிடுவது இனிக்கும் /
களவு செய்து சம்பாதித்த பணம்/
கானல் நீராய் காணாமல் போகும் /
கையூட்டு வாங்கி சேர்த்த பணம் /
கை விட்டு வெளியேறி செல்லும்/
விவசாயி உடல் விட்ட வியர்வையில் /
வியாபாரிகள் சந்தோஷமாக நீச்சல் அடிக்கிறான்/
தொழிலாளர் வியர்வை கடலில் மூழ்கி /
தங்க முத்து எடுக்கிறார் முதலாளி /
பெண்கள் பத்துமாதம் சுமந்து வியர்வைசிந்தி /
பெற்ற பிள்ளைக்கு ஆண்கள் அப்பா /
சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்