ஆண்டுகள் பல கடந்தும் மீளவில்லை....!!

வானத்தை
முத்தமிட்டு
அதன் வர்ணம் வாங்கிக்கொண்டாய்....

கரைகளின் மணல்களை
காதலுடன் கூடல் கொண்டு
நுரைகளை
பிரசவித்தாய் உன்
குழந்தைகளாய்....

மானிடக் குழந்தைகளில்
காதல் கொண்டோ
முத்தமிட்டு
அணைத்துக்கொண்டாய்
சுனாமி என்னும்
பெயரால்....?

வாழ வைத்து
வழிகாட்டி....
நீயே வாரி அணைத்தாய்....
பாவங்கள்
பொறுக்காமலோ...?
இல்லை
அன்பு அதிகரித்தோ....?

இத்தனை ஆண்டுகாலம்
கடந்து சென்றபோதும்
துன்பத்தால்
மீளவில்லை...

மாண்ட உறவுகள்
மீண்டு வருவதில்லை
என்றறிந்த போதும்
ஏற்க மறுக்கின்றது
நொந்து போன
என் மனம்......!!

எழுதியவர் : அம்மு (15-Oct-11, 5:48 pm)
பார்வை : 265

மேலே