மனதிடம் பேசும் மௌனச் சலனம்

பனிநீரோ டையில் பளிச்சிடும் நிலவொளி
இனிய குளிர்த்தென்றலில் இதயம் வருடிடும்
மனதிடம் பேசும் மௌனச் சலனம்
உனதிதழ் தன்னில் கற்ற பாடம்

பனிநீரோ டையினில் பால்நிலா வெண்மை
இனிய குளிர்ச்சி இதயம் வருடிடும்
பேசிடும் மௌனச் சலனம் மனதிடம்
பேசுவது உன்னிதழ்ப்பா டம்

பனிநீரோ டையினில் பால்நிலா வெண்மை
இனிய குளிரில் இதயம் -- பனியோடை
பேசிடும் மௌனச் சலனத்தில் நெஞ்சிடம்
பேசுவது உன்னிதழ்ப்பா டம்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Sep-23, 9:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே