கள்ளமும் கயமையும்

பூமியில் வாழ்க்கை பொதுவாய் நமக்கு பூவினம் போன்றே இருக்கின்றதே
ஆவலினாலே ஆசைகள் பெருகி ஆபத்துள் மனமும் அமிழ்கிறதே
தேவைக்கு மேலே திரவியம் சேர்த்து தினந்தினம் உடலும் அலுக்கிறதே
உள்ளதைப் பகிர்ந்து உறவுகளோடு உரையாட உள்ளம் மறுக்கிறதே
நல்லதை எல்லாம் சொல்லும் எதையும் நாடிட மனமும் வெறுக்கிறதே
பணத்தை மட்டும் ஈட்டிட மனமும் பலவகைத் திருட்டினைச் செய்கிறதே
வெள்ளை நிலையைத் தொல்லைச் செய்தே விதவித பிரச்சனை பெருகிறதே
அல்லலும் அவதியும் அதனாலேயே அவதாரமாய் பிறப்பை எடுக்கிறதே
கள்ளமும் கயமையும் இல்லா ஞாலமும் இனியேனும் உருவானால்
காற்றும் நீரும் கவிமிகு புவியும் அழற்ச்சி இன்றி பலப்படுமே.
— நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (23-Sep-23, 1:21 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 64

மேலே