இயற்கையின் சாட்சியாய் புது வரவு

இயற்கையின் சாட்சியாய் புது வரவு

குடையாய் விரிந்த வானம்
இருளை நிறைத்து மயங்க
வைத்து

மின்னும் நட்சத்திரங்கள்
கண்ணை சிமிட்டி வெளிச்சம்
காட்டி

தூக்கம் இல்லா கடலலைகள்
கரையில் வந்து உரசி
ஆறுதல் தந்து

அசையா மெளனமாய்
அனைத்தும் விழித்து பார்க்க

அதோ..காற்றின் ஒசையில்
விரீடும் குழந்தையின் குரலொன்று
குடிசையின் உள்ளே இசைக்கிறது

அதுவரை வலியின் வேதனை
முணங்கி விழுங்கிய தாயோ

வீறிடும் குழந்தையை எடுத்து
மார்பில் அணைத்து தனை மறந்தாள்

அதுவரை
இருட்டை நிறைத்திருந்த வானம்
வெளிச்சத்தை கொஞ்சம்
கொஞ்சமாய் கொடுத்துதவ
விண்மீன்கள் கடமை முடிந்து
துயில் கொள்ள
கடலைகள் இப்பொழுது
சந்தோசமாய் கரையில் மோத

புதிய உயிரொன்றை உலகத்தில்
தவழ விட்ட தாயையும் சேயையும்

பாராட்ட வானத்தில் இருந்து
சூரியன் இதோ எட்டி பார்க்கிறான்..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Sep-23, 2:03 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 149

மேலே