பூவும் poovaiyum
அழகிய பெருந் தாமரைப்பூ அதன்
அழகைப் பார்த்து ரசிக்க முடியாது
அழகி இவள் வதனம் தாமரைப்பூ
அதை தோழியர் சொல்லி புகழ
இவள் கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறாள்
இறைவன் படைப்பில் அழகே இப்படித்தான்
நாம் பார்த்து ரசிக்க முடியும்
நாமே பார்த்தும் ரசிக்க முடியும் நம்மையே
பூ அழகே ஆனால் பூவுக்கு தெரியாது
பூவை இவள் அழகி அவள் அறிவாள்!