தாயான சேய்
தாயான சேய்
[][][][][][][][][][][][][][]
தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு வளர்ப்பு //
தாயாராக மாறினாள் சின்னஞ்சிறு பாப்பா //
அம்மாவின் சேலையில் தாயாகமாறியதால் ஆட்டுக்குட்டி //
அம்மா என்றழைத்து தோளின்மீது தாவியது //
உனக்கு நான் எனக்கு நீயே//
உன்னதமான உறவு நமக்குள் உண்டு //
பசி எடுத்தால் அருகம்புல் தாரேன்//
பஞ்சு மெத்தை தூக்கத்துக்கு மடிதாரேன் //
தூக்கி சுமந்திடுவன் உனக்கு கால்வலித்தால் //
தூக்கணாங்குருவி இரண்டு விளையாட துணையிருக்கு //
பட்டுமெத்தை தூக்கம் தான் மறந்து //
பட்டியில தூங்கிடுவேன் உன்னை அணைத்து ..//
சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்