வழி

கள்ளி லுள்ளசுவை கள்ள முள்ளதது
கல்லு முள்ளுடைய கேடடா
முள்ளு முள்ளமர முள்ள நல்லகனி
மெல்ல மெல்லசுவை தேனடா
உள்ள முள்ளவரை உள்ள நல்லகனி
உள்ள துள்ளபடி தேடடா
வெள்ள முள்ளநதி வள்ள முள்ளவிதி
வெல்ல வுள்ளவழி தானடா

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Sep-23, 2:08 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 48

மேலே