பூவுலகின் பேரழகி33
தாரா
இது என்ன பேரா
இல்லை
இல்லை
என் மனதின் வலியை எடுக்காது காதல் வலியை கொடுக்கும் பேரா ( மாத்திரை)
சேரா கிடந்த என் வாழ்க்கைச் சாலையில்
இவள் ஊற்றினாள் தாரா
அதன் பிறகு சோலையாய் மாறி என் வாழ்க்கை ஆனது ஜோரா
என் இதய வலியை அவள் நன்கு அறிவாள்
ஆயினும் அரிவாள் இன்றி அவள் அறிவால்
என் இதயத்தை அரிவாள்
கடலுக்கு எப்படி நீர் வந்தது
இவள்
அழுகையில் இவள் கண்ணழகை விட்டுப் பிரிந்த கண்ணீர்த் துளிகள்
வேதனையால் அழுது அழுது கடல் மட்டம் உயர்ந்து..
மண்ணில் நிலவை விட அழகாய் சந்திரா இருக்கையில்
இந்திய அரசு
ஏதோ விண்ணில் ஒரு சந்திரன் இருப்பதைப் போல
சந்திராயனை அனுப்பி பல கோடிகளை வீணடிக்கிறது.
கந்தல் மலர்களாய் இருக்கும் மலர்கள் கூட இவள் கூந்தலில் ஏறி விட்டால் காந்தல் மலர்களாய் ஆகிறது
இவள் கூந்தல் காற்றில் பறக்கும் போது தன்னால் இவ்வளவு சிறப்பாய் பறக்க முடியவில்லை என ஏங்கி அழுகிறது குருவி
இவள் கூந்தல் பறக்காத போது அது தான் கருப்பு அருவி
இவள் ஐஸ்கிரீம் சாப்பிடும் ஐஸ்வர்யாராய்
போன பிறவியில் இவள் தான் ரம்பை ஊர்வசி மேனகைக்குத் தாய்
சூரிய ராயன் எனும் செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்து அதில் இவளை ஏற்றி சூரியனுக்கு அனுப்பி வைத்தால் சூரியன் நிலவைப் போல் குளிர்வடையும்..
இந்திய சிற்பக்கலையும் கிரேக்க சிற்பக்கலையும் இணைந்து காந்தாரக் கலை உருவானது..
ஆனால்
எந்த இரண்டு கலை இணைந்து இந்த கலையரசி உருவானாள் என்று நாசா விஞ்ஞானிகள்
இன்றும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.