தன்னம்பிக்கை 1
சுவாரசிய நாட்கள் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு விநாடிகளும்
ரசித்தே வாழ்க்கை கழிக்கிறது...
இரண்டு குழந்தை அவளுக்கு உலகமே அந்த இரண்டு குழந்தைகள் மட்டுமே உலகம் அவளுக்கு பெயர் தேவி.
ஆண் குழந்தை ,பெண் குழந்தை
தேவியின் கணவரும் மிகவும் நல்லவர்.இருவரின் வாழ்க்கையில்
இரு குழந்தைகளை ஊட்டி சீராட்டி
வளர்த்தனர்.உறவுகளின் முக்கியத்துவம்,பெரியவர்களுக்கு
மரியாதை கொடுத்து பழக,படிப்பிலும் குறை இல்லை.
தேவி வீட்டை விட்டு வெளியே
போகமாடார்.உறவுகள் வீட்டிற்கு
மட்டுமே செல்வார்.யார் எதை சொன்னாலும் நம்புவார்.
தீடீரென அவள் கணவருக்கு வேலை இல்லை. என்ன செய்வது என்றே தெரிய வில்லை.பிள்ளைகள் படிக்கின்றனர்.படிப்பு செலவு,வீட்டு நிர்வாகம் என அனைத்தும் ஒரு நொடி பொழுத்தே இவள் கைகளில்..
என்ன செய்வது ஏது செய்வது என ஒரு நொடி கூட பயப்படவில்லை...
அவளின் தன்னம்பிக்கை பேச்சு,அவளின் கை தொழில் கைவிடவில்லை,சிற்றுண்டி தொழில்
செய்து தன் குடும்பத்தின் நிலையை உயர்த்தினார்...
பெண்கள்தானே நாம் என்ன செய்வது என எந்த தருணங்களிலும்
துவண்டு விடாமல் இருங்கள்...
உங்களுக்கான பாதை என்றும் எப்பொழுதும் உங்களிடமே உண்டு...
உங்களை நீங்களே அதிகம் நேசியுங்கள் நம்புங்கள்....