இருச்சக்கரம்

பிறந்து வாழ்ந்து ஆசைகளை ஏற்று
ஏமாற்றம் அடைந்து மீண்டும் புதிய பாதை அமைத்து இறப்பு ஒன்று வரும் வாழ்வில் ஒருநாள் என வாழ்வில் நிறைய திருப்பங்கள்....

சுவாரசிய வாழ்வில் தீடீரென ஒரு இழப்பு இருசக்கர வாகனம்தானே
என என்றும் கவனம் தவறி ஓட்டாதீங்க..தலைகவசம் இல்லா பயணம் வேண்டாம்....

ரோகினி அவள் தம்பி என இருவர் மட்டுமே வாழ்ந்து வரும் அந்த வீட்டில் புதியதாய் தம்பி நண்பர் விக்ரம்
தங்கி இருந்தான்.
குறுகிய காலத்தில் ரோகினி தம்பி போலவே விக்ரமும் தம்பியாய் மாறினான் பாசத்தை காட்டி சட்டை வாங்கி கொடுப்பது,வெளியில் செல்வது என மூவரும் சந்தோஷமாக நாட்கள் கழிந்தன.விக்ரம் உணவு ஆர்டர் செய்தால் அதை குறிப்பிட்ட
இடத்தில் கொடுக்கும் வேலை.ரோகினி தம்பியோ இருசக்கர வண்டியில் சென்று பொருட்களை கொடுக்கும் வேலை..
ரோகினி மருத்துவமனையில் கணக்கு பார்க்கும் வேலை செய்து வந்தனர்.
தீடீரென விக்ரமுக்கு விபத்து என்று ரோகினிக்கு அவள் தம்பி போன் செய்தான்.
இரவு பகலாக மருத்துவமனையில்
ரோகினியும் தம்பியும் விக்ரமை கவனித்து கொண்டனர்.
விக்ரம் உறவினர்களும் அங்கேதான் இருந்தனர்.
ஒருவாரம் கழித்து விக்ரம் இறந்து விட்டதாக மருத்துவர் கூற அதை ஏற்க முடியவே இல்லை ரோகினிக்கும் அவள் தம்பிக்கும்....
தலைகவசம் அணிந்து இருந்தால் இந்த நிலைமை உனக்கு வந்து இருக்காது என புலம்பி அழுக்கையை அடக்க முடியாமல்
ரோகினி மனம் உடைந்தாள்..
இருச்சக்கரம் அவசியம்
தலை கவசம்
மிகவும் அவசியம்..

எழுதியவர் : உமாமணி (30-Sep-23, 1:10 am)
சேர்த்தது : உமா
பார்வை : 77

மேலே