சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 76

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 76
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் ஆடித் தவசு 4 ஆம் நாள் ரிஷ்ப வாகனத்தில் அம்பாள் பவனியின் சிறப்பு :-
●●●●●●●●●●●●●●●●●●●
சர்வசம்ஹாரக் காலத்தில்
எல்லாப் பொருள்களும்
அழிந்து விட
தர்மதேவதையாகிய அறக்கடவுள்
தான் அழியாதிருக்கும் பொருட்டு
வெண்மை நிறக்
காளை உருவெடுத்து
இறைவனின்
வாகனமாக மாறிய
ரிஷ்ப வாகனத்தில்
அம்பாள் வீற்றிருக்கம்
காட்சித் தர்மத்தின்
வடிவாகத் தெரிகிறாள்

ரிஷபம் என்பது
சிவனின் வாகனம்

ரிஷ்ப வாகனம்
நின்ற நிலையில்
நாக்கு மேல்வாயை
நக்கியவாறு இருக்கும்
கழுத்தில் மணிகளை
மாலையாகக் கொண்டிருக்கும்

ரிஷபம் என்றால் ஆசை( காமம் )
என்ற பொருளும் உண்டு
சிவன் ஆசையை(காமத்தை) அடக்கியவர்
என்பது இதன் பொருள்

காளைத் தர்மத்தின் சின்னம்
தர்மம் என்பது எதிர்பார்ப்பு
இல்லாது செய்வது
காளை எவ்வித எதிர்பார்ப்பும்
இன்றி விவசாயப்பணிச் செய்திடும்

தானியங்களை விவசாயிக்கு கொடுத்து விட்டு
தழைகளையும் இலைகளையும் காளைகள் சாப்பிடும்
தொண்டு மனப்பான்மை மனிதனுக்கும் வரவேண்டும்
உயர்ந்தப் பொருள் நம்மிடம் இருந்தாலும்
பிறர் நலனுக்கு இழக்கத் தயங்கக்கூடாது
என்பதை ரிஷபம் உணர்த்துகிறது

கடினமான நிலங்களையும்
கஷ்டப்பட்டு உழுவதுபோல்
மனிதனுக்கு வந்திடும்
கஷ்டத்தில் துவண்டு விடாது
கடமையிலிருந்து விலகாதிருக்க
ரிஷ்ப வாகனம் உணர்த்துகிறது

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Oct-23, 5:19 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 24

மேலே