பூவெல்லாம் உன் வாசம்
பூவெல்லாம் உன் வாசம்
××××××××××××××××××××××
பூக்களின் வாசமாக
பூமகள் வசமானேன
பாக்களின் ஒசையாக
பாவையொன் உடலானேன்
இதழாக விரியும்
இமையினைக் கண்டேன்
மிதமானக் காதலை
மெல்ல உணர்ந்தேனே
தானா வந்து
தேனா சேர்ந்திட
மானா வந்த
கானாக் குயிலே
அழகு நடையோ
கழுகுப் பார்வையில்
வழுக்குது மெதுவா
இழுக்குது உன்னிடத்திலே
ராசிப் பார்த்து
வாசிக்க நாதஸ்வரம்
பாசிமாலை மாத்தியே
ஆசி வாங்கிடவே
நெஞ்சம் பசிக்குது
மஞ்சம் விளையாட
கொஞ்சம் வாயேன்
மிஞ்சாமாத் தாரேன்
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்