சித்தம் பெற நித்தம் நல்லதையே நினை மனமே

குடு குடு மனமே,
குடு குடு மனமே, குடைச்சல் கொடுத்து குடையும் மனமே;
குடையிது குடையிது மனமே,
மனம் உளைச்சலில் குடையிது மனமே;
கடு கடு மனமே கல்லாய்ப்போன மனமே,
கடு கடு மனமே கண்மூடித்தனமாய் செயல்படுவதும் ஏன் மனமே;
சிடு சிடு மனமே, சினம் கொண்ட மனமே;
சீற்றம் கொண்டு திரிவதேன் மனமே;
சீ சீ மனமே சீழ்பிடித்து, துற்நாற்றம் அடித்து, அழுகுவது தான் ஏன் மனமே;
பட பட மனமே பதை பதைக்கும் மனமே,
பண்மை அன்பை மறவாதே மனமே;
தட தட மனமே தடுமாறும் மனமே,
தனிமையில் கிடந்து வாடுவதேன்;
மட மட என்று செல்லும் மனமே மன்னிக்க மறந்ததேன்;
சொட சொட என்று சொட்டும் மனமே, சொல்பேச்சி தான் கேட்பாயோ;
கட கட என்று ஓடும் மனமே கட்டித்தான் போடுவாயோ;
வெட வெட மனமே வெளுத்துப்போன மனமே;
வேடிக்கை பார்க்கும் மனமே வேண்டாததை செய்யாது தான் இருப்பாயோ;
குடு குடு மனமே சுச்சல் கும்மாலம் போடும் குறையுள்ள மனமே;
போதும் போதும் என்று நிறைவுதான் அடைவாயோ;
தடு தடு மனமே தள்ளாடும் மனமே;
தவறினைத் தடு மனமே;
எடு எடு மனமே எட்டியே நிற்காது எத்தியே விடாது,
நல்லதையே எடு மனமே;
விடு விடு மனமே விடைகொடுக்கு முன் வேண்டாததை, வேதனையை விடு மனமே;
தொடு தொடு மனமே, தொடு;
அன்பால் பண்பால் பாசத்தால் தொடு மனமே;
படு படு மனமே,
பாடு படு மனமே, எப்பாடு,படினும் கூப்பாடு போடாமல் இரு மனமே,;
கொடு கொடு மனமே மெல்ல விடை கொடு மனமே;
கன கன மனமே, கனல்களை தணல்களை சுமக்கும் மனமே,
கண்ணீர் வடிப்பதை விடு;
ஏன் ஏன் மனமே, ஏன் இந்த ஏமாற்றம் மனமே;
ஏன் ஏன் மனமே எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் மனமே;
போ போ மனமே, போக்கு காட்டும்; பொல்லாத மனமே,
போதும் போதும் என்றே சொல் மனமே;
வா வா மனமே வந்தே அமைதி பெறு மனமே;
ஆம் ஆம் மனமே ஆதாயம் தேடாதே மனமே;
ஆகா மனமே அத சரி மனமே
ஆழ்ந்த யோசனை தான் என்ன மனமே;
அய்யய்யோ மனமே அது கூடாது, ஆணவம் அகம்பாவனம் வேண்டாம் மனமே;
எழு எழு மனமே ஏங்கித் தவிக்காது.
வீணாய் பொழுதை கிழிக்காது,
விழாது எழுச்சி பெறு மனமே;
நினை நினை மனமே,
தினமும் ஆசைத்தீயில் விழுந்து கருகாது,
நனை நனை மனமே, கருனை மழையில் நனை மனமே.
நினை நினை மனமே சித்தம் பெற நித்தம் நல்லதையே நினை மனமே.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (13-Oct-23, 11:30 am)
பார்வை : 16

மேலே