ஒரு நிமிடம்
ஒரு நிமிடம்.
உன்னோடு நான்
தனியாக பேசவேண்டும்
என் மனதில் உள்ளதை
எல்லாம் உன்னிடம் நான்
சொல்ல வேண்டும்
நீ சொல்வது.......
என் மனதில் நீர்
ஊற்ற வேண்டும்
நீர் ஊற்றி
அங்கு நீ காதல் செடி
ஒன்று நட வேண்டும்
அதில் பூக்கள் (நினைவுகள்)
பல நான் பறிக்க வேண்டும்
பறித்த பூக்கள் எல்லாம்
கோர்த்து மலர் மாலையாக
நான் உன் கழுத்தில்
ஒரு நாள் போட வேண்டும்
அன்று முதல்
நானும் நீயும்
கணவன் மனைவியாய்
கை கோர்த்து ஊரறிய
நடக்க வேண்டும்
ஒரு நிமிடம்
உன்னோடு நான்
தனியாக
பேச வேண்டும்
என் மனதில் உள்ளதை
எல்லாம் நான் உன்னிடம் .
சொல்ல வேண்டும்
ஆக்கம்
சண்டியூர் பாலன்.