கண்ணதாசன்
கண்ணதாசன்.
தமிழ்ச் சான்றோர் பலர் இருந்தும்
எனக்கு பிடித்த தமிழ்ச் சான்றோர்...
ஒருவரா...இருவரா
எண்ணிப்பார்க்கிறேன்.
ஏட்டறிவு எள்ளளவே ஆயினும்
பட்டறிவு விரிந்ததினால் உந்தன்
பாட்டறிவு கடலளவு ஆனதே..
தமிழ்
உன் வாசலில் வாசகம் செய்ததே
வார்த்தைகள்
உன் வாயினில் வரிசைகட்டி நின்றதே
சினிமா பாடலைக்கூட
இலக்கிய தரத்திற்கு உயர்த்தியது
உன் தமிழல்லவா?
உன் அனுபவத்தை
எளியோர்க்கும் புரியும்படி
உன்னால் மட்டும் எப்படி
எளிமையாய் எழுத முடிந்தது?
இதிகாசங்களும்...இலக்கியங்களும்
புராணங்களும்...புதினங்களும்
உன்னிலிருந்து புறப்படும்போது
புதிர் விலகி பூவாய் மலர்ந்ததுவே..
இசையின் தாளக்கட்டுக்குள் உன் தமிழ்
இசைந்து இசையோடு கலந்த மாயமென்ன?
இசையோடு மட்டுமல்ல எங்களின்
உதிரத்தோடும் கலந்துவிட்ட ஜாலமென்ன?
காதலா..... சாதலா....கண்ணதாசன்
தத்துவமா... தனித்துவமா…. கண்ணதாசன்
ஆத்திகமா.... நாத்திகமா....கண்ணதாசன்
மகிழ்ச்சியா ... சோகமா ...கண்ணதாசன்
வெற்றியா... தோல்வியா... கண்ணதாசன்
தாலாட்டா ... பாராட்டா....கண்ணதாசன்
தாயா...தந்தையா
தங்கையா...மங்கையா
அண்ணனா..தம்பியா..
நண்பனா...துரோகியா
எல்லாவற்றிலும்
கண்ணதாசன்...கண்ணதாசன்.
சிறுகதையா பெருங்கதையா
சரித்திர நாவலா
சமூக கதைகளா
அர்த்தமுள்ள இந்துமதமா
இயேசு காவியமா
கட்டுரையா கடிதங்களா
எங்கும்... எதிலும்...
கண்ணதாசன்...கண்ணதாசன்.
தமிழை நீ ஆட்கொண்டாய்
தமிழ் உன்னை ஆட்கொண்டது.
உங்களுக்குள் நடந்த போட்டியில்
எங்களுக்கு கிடைத்தது
அமிர்தமாய் தமிழ் பாடல்கள்.
உன் விசுவரூப தரிசனத்தை
வியந்து வணங்கத்தான் முடியமே தவிர
எட்டிவிட முடியாது.
எழுத..எழுத ..
ஏடுகள் பத்தாது
வார்த்தைகள் வற்றாது.
நீ சொல்லாதது எதுவுமில்லை.
நீ கூறியதுபோல்
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் உனக்கு
மரணமில்லை.
15/10/23