இறைவனை நினை மனமே
நான் முற்போக்குவாதி பகுத் தறிவாளன்
என்றெல்லாம் தன்னையே கூறிக்கொள்ளும் மனிதன்
என்றாகிலும் இந்த சிந்தனை எல்லாம்
இவனுக்குள் புகுத்தியது யாரென்று யோசித்தானா
கொஞ்சம் இரத்த ஓட்டம் தடைபட்டால்
மஞ்சமே தஞ்சமாய் செயலிழந்து வீழ்கிறான்
தன்னையே அறியாது வெறும் கட்டைபோல
ஆனால் எல்லாம் வல்லவனையே இல்லை
என்கின்றான் இவன் என்ன அறியாமை இது