தென்பொதிகைத்தமிழ் செவ்விதழ் ஏந்திவர

தென்னை இளம்காற்று தேனென வீசிட
தென்பொதி கைத்தமிழ் செவ்விதழ் ஏந்திவர
பொன்னெழில் தூவி கதிர்விரியும் பொய்கையில்
புன்னகை தூவிநீநிற் பாய்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Oct-23, 8:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே