தேயிலை பறிக்கிற தேன் மலரே
தேயிலை பறிக்கிற
தேன் மலரே
×××××××××××××××××××
தேயிலை பறிக்கிற
தேன் மயிலே
ஆயிழை பெண்ணே
ஆயுளடி நீயெனக்கு
கையிருக்கும் இலையின்
தேனீர் இனிக்குமே
உதடுயிருக்கும் வார்த்தைகள்
உதிராதது கசக்குதே
வானம் இருண்டிட
நினைவுகள் வாட்டுதே
கரம் சேர்வதாகக்
கனவுகள் கதையாகுதே
எறிந்தப் பந்தாக
மனமும் துள்ளுதே
மணந்திட மனமில்லா
மச்சினி உறவுமேனோ
வயிற்றுத்தசை(சிக்ஸ் பேக்) சுருங்கியே
வலிமையிழந்து மரணித்திட
காரணம் நீயேயென
ஊர்பேச நேரும்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்