காற்றே என் சுவாச பூங்காற்றே 555
***காற்றே என் சுவாச பூங்காற்றே 555 ***
பூங்காற்றே...
விழிகளுக்கு
தெரியாத கற்று...
அதிவேகத்தில் விழிகளையும்
கலங்க செய்துவிடும்...
கையில்
சிக்காத காற்றுதான்...
ஒருசெல் உயிர் முதல் பலகோடி
செல் உயிர்கள்வரை...
ஜீவிக்க
வைப்பதும் காற்றுதான்...
கோடையில் இதமாக
வீசினால் தென்றல்...
மழைகாலத்தில்
அதிவேகம் புயல்...
உயிரும் காற்றும்
கண்ணுக்கு தெரிவதில்லை...
நாம்
உணர வேண்டும்...
கையில் சிக்காத
காற்று குடுவையில் சிக்கும்...
கண்ணுக்கு தெரியாத
உயிரையும் காக்கும்...
கையில்
சிக்காத காற்றுதான்...
உலகத்தையும்
இயக்க செய்கிறது...
காற்றை போல அன்பு
என்னும் வார்த்தைதான்...
உலகத்தை
அழியாமல் காக்கிறது.....
***முதல்பூ.பெ.மணி.....***