புது துணியெடுக்கனுத்தா

பொழுது சாஞ்சி அந்தியாச்சு
பூவெல்லாம் வாடிப் போச்சு
காட்டு முள்ளு வெட்டி
கையிரெண்டும் வீங்கி போச்சி

மூச்சு முட்ட முள்ளு வெட்டி
மூட்டுவலி மிச்சமாச்சி
புள்ளமுகம் நினைக்கையிலே
துன்பமெல்லாம் துச்சமாச்சி

சந்தையிலே கூவிக்கூவி
நாலு காசு பார்த்தாதான்
கஞ்சிக்குக் கருவாடு
வாங்கிப்போக முடியுமாத்தா

தீபாவளி பெரு நாளு வேற
சீக்கிரமா வர்ரதாலே
புள்ளைங்களுக்கு
புது துணியெடுக்கனுத்தா !

எழுதியவர் : கோ. கணபதி (31-Oct-23, 11:22 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 44

சிறந்த கவிதைகள்

மேலே