ஏழை எறும்பு
நாட்டில் நாங்கள்
ஏழை எறும்புகள்
அயராமல் உழைக்கும்
ஏழை எறும்புகள்
கரும்பு தோட்டம்
யானைகள் கூட்டம்
அரசியல் பாகன்
யானைகள் கூட்டம்
வேலைகள் செய்தும்
ஏழை எறும்புகள்
சேலைகள் நேய்தும்
ஏழை எறும்புகள்
தீபாவளி வருதே
குழந்தை அழுதே
கடையினில் லட்டு
இல்லை துட்டு
தேயுது நாட்கள்
தேயுது உடலும்
ஏழை எறும்பு
கண்ணில் துரும்பு
யானை வாயில்
கரும்பு தோட்டம்
காலில் மிதிபட்டு
நோகும் எறும்பு