களிப்பிலா வகையிற் வகையுளி செய்தால் - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(1, 5 சீர்களில் மோனை)
களிப்பிலா வகையிற் வகையுளி செய்தாற்
கசந்திடுஞ் செய்யுளுங் காண்பா
யுளறுதற் போக்கி லுவப்பிலாப் பாட
லொன்றுமோ யிசைவுடன் றானே!
இளகிடும் பாங்கா யின்சொலை வைத்தா
லிலங்கிடும் பாடலு மினிதே
ஒளிமய மாகு முன்னெழிற் பாட்டு
மோங்குமே வும்பெய ராமே!
- வ.க.கன்னியப்பன்