கடினம்தானே

கடினம்தானே
10/11/23
பனிப்பூ பார்வையில் பணிந்துநான் போனேனே
கனிமொழியாள் கவனிப்பில் கரைந்துநான் போனேனே
இனி என்ன வேண்டும் வாழ்வில் இறைவா இதுபொதுமே
தனியனாய் இருந்துநான் தடுமாறிய வேளையில்
தாயாய் தாதியாய் தாரமாய் வந்தென்னை
தாலாட்டிய தமிழ்மகளே ஆணிவேராய் தாங்கிய இனியவளே
பாலூட்டிய அன்னை சாதிக்காததை சாதித்துக்காட்டிய
என்னவளே தென்னவளே வாழ்வில் காதல் சொன்னவளே
இன்னும் என்னசொல்ல... ஏழுஜென்மமும் நீ வேண்டும்
உன்னை புரிந்து கொள்ள இத்தனை ஆண்டுகள்
என்ன செய்ய? பெண்மன ஆழம் அறிவது கடினம்தானே

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (10-Nov-23, 6:00 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 55

மேலே