விவேக சிந்தாமணி - நூல் - பாடல் 3 - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

குக்கலைப் பிடித்து நாவிக்
..கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி
..மிகுமணம் செய்தா லும்தான்
அக்குலம் வேற தாமோ
..அதனிடம் புனுகுண் டாமோ
குக்கலே குக்கல் அல்லால்
..குலந்தனில் பெரிய தாமோ? 3

- விவேக சிந்தாமணி

எழுதியவர் : (17-Nov-23, 12:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே