மயிலை தரிசனம்

மயிலை தரிசனம்

அங்கமெல்லாம் தங்கமாய் மயிலை கற்பகாம்பாள் இருக்க
ஆயிரம் நாமங்களைக் கூறி அர்ச்சித்து பூக்களால் அலங்கரித்து
இறைவியாக நிற்கும் அவள் அழகை காண இரு கண்கள் போதாது
ஈசன் அருள் பாலிக்கும் இடமெல்லாம் ஏற்றிய தீபங்கள் ஒளிவிட
உள்ளிருக்கும் கடவுளை காட்டிட ஒரு உருவமாக அமைத்திருக்கும்
ஊகிக்க இயலாத பரம்பொருளை மனதில் இருத்தி கண்களில் காண
எங்கும் சங்கொலி ஒலிக்க கற்பூரத்தில் இறைவன் முகம் ஜொலிக்க
ஏகாந்தமான உணர்வுகள் உணர்ச்சிகளாகி கண்களில் நீராக சொரிய
ஐம்புலனையும் அடக்க வழி வேண்டும் என கைகூப்பித் தொழுது
ஒரே நினைவாக இறைவனோடு மனதால் ஒன்றிட நினைக்கையில்
ஓம்மெனும் பிரணவ மந்திரத்தைக் கூறி பக்தி பரவசமாக நிற்கையில்
உலக பொருள் ஆசைகள் அனைத்தும் கானல் நீராக மறைந்ததம்மா

எழுதியவர் : கே என் ராம் (17-Nov-23, 6:49 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 38

மேலே