கார்த்தீகை 27
கழுத்தில் நஞ்சு
சுமந்து
சுற்றம் மறந்து
குடும்பதை இழந்து
குடும்பதையும் மறந்து
போர் முனையில்
இன்னுயிரை இழக்கும்
மாவீரனே
மரணம் வருவதை
அறிந்தும்
மரணத்தை
துணிந்து ஏற்று
தமிழுக்காய் மரணித்தவனே
நீங்கள் இருக்கையில்
நம்பிக்கையில்
மட்டுமே
நாங்கள் இருந்தோம்
சுற்றி திரிந்தோம்
சுதந்திரமாக வாழ பழகினோம்
வீட்டுக்கு ஒருவர்
நாட்டுக்காக
உயிர் கொடுத்த
எங்கள் மாவீரனே
அதிஷ்டகாரன் தான்
நீங்கள்
உங்கள் உயிர்களை
தமிழுக்கு கொடுத்து
நாட்டுக்காக மாவீரர் ஆனிரே
நிம்மதியாக
உறங்கி
கொள்ளுங்கள்
உங்கள் இடத்தில் நாங்கள்
உள்ளோம் தட்டிகேக்க
உங்களுடைய ஆத்மா
நிம்மிதிய உறங்க
நீங்கள் செய்த சத்தியம்
சத்தியமாக நிறைவேறும்
பூவாய் இருந்தவர்கள்
பூவாய் உதிர்ந்தவர்கள்
நீங்கள்
தமிழீழ மக்களின்
மனதில்
கும்பிடும்
கோயில்
உங்கள் கல்லரைகள் தான்