நாலாயிர திரவிய பிரபந்தம்
முங்கு போடு படகு விடு
வூட்டுக்குள்ளே அரசு நடத்து
நாக்காலயே வாக்காளருக்கு
ஊரு சிரிக்க நாமம் போடு
அம்மா ஒட்டு வாங்கலையோ ஒட்டு!
ஐயா ஒட்டு வாங்கலையோ ஒட்டு!
கூவாங்கரை, கிழக்குக்கரை
நாறுதுங்க காலக்கரை
மழைக்கு நனைஞ்ச சென்னைக்கரை
முதக்குதுங்க முதலையோட
அம்மா…. ஒட்டு வாங்கலையோ ஒட்டு!
ஐயா…. ஒட்டு வாங்கலையோ ஒட்டு!
துட்டுக்கு ஒட்டு… ஓட்டுக்குத் துட்டு…
ஓடு ஓடு ஒட்டு போடு
முங்கு முங்கு முங்கு போடு
கண்ணாரக் கண்டு கண்கோடி போச்சு
நாலாயிர திரவியம் பிரபந்தம் ஆச்சு