நம்பிக்கை
நீண்ட வானம் நிலவினை நினைப்பதில்லை
அழகிய மலர்கள் மணத்தினை நினைப்பதில்லை
அது தன்னுள்ளே இருப்பதால்
வீரனின் வெற்றி புகழ்ச்சிக்கு மயங்குவதில்லை
அவனின் வீர செயலினால்
வெற்றி என்னும் சொல்லினை மட்டும் நினை
மனதில் கொள் அந்த நினைவினை
உன் ஆசைகளை மனதில்
ஆலமரமாய் விதைத்துவிடு
விருட்சமாய் வேருன்றும் காலம்
வெகு தொலைவில் இல்லை
அது என்றென்றும் உன்னருகில்