தென்றல் என் வாசலில்


முழுநாள் வேலை தந்த
களைப்போடு வீடுதிரும்பி
அழைப்புமணி அடிக்க
எத்தனிக்கையில்
படியருகே அந்த
சின்னஞ்சிறு காலணிகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
தென்றல் வந்து
உரசிசென்றதுபோல்,
உற்சாகம் உடனேதொற்றிக்கொள்ள
அழைப்புமணி சற்று பலமாகவே
அடித்தது அன்று !!!!

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (16-Oct-11, 7:41 pm)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 245

மேலே