கஞ்சாவை எடுத்துட்டு வாங்க

ஒரு ஆணும் பெண்ணும் ஒரு வீட்டின் அழைப்பு மணியை அடிக்கிறார்கள். ஒரு நடுத்தர வயது பெண் கதவைத் திறந்து கொண்டு:
@@@@@
வாங்க வாங்க. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை தான் வருவீங்க. இன்னிக்கு வெள்ளிக்கிழமையே வந்துட்டீங்க.
@@@@@@@
நாளைக்கு வெளியூர் போகணும். கஞ்சாவுகாகாகத் தான் இன்னிக்கே வந்துட்டோம்.
#@#@@@
(இதைக் காதில் கேட்ட வழிப்போக்கர் ஒருவர் காவல்நிலையத்திற்கு தகவல் அனுப்புகிறார்.)
@@####@#
நாங்கள் வந்த விசயத்தையே மறந்துட்டீங்ளே! கஞ்சாவை எடுத்து வாங்க. பாக்கணும்.
@@@###@
இன்னும் அரைமணி நேரம் ஆகும். இப்படி உட்காருங்க. தேநீர் கொண்டு வர்றேன்.
(இப்போது காவல் ஆய்வாளர் வண்டி வருகிறது. ஆய்வாளரும் நான்கு காவலர்களும் அந்த வீட்டிற்குள் நுழைந்து:)
ஓ... இதுதான் கஞ்சா விற்கிற வீடா? ரொம்ப நாளாவே இந்தப் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக ஒரு தகவல் வந்தது. போங்கயா. கஞ்சாவை எங்க பதுக்கி வைத்திருந்தாலும் போய் எடுத்துட்டு வாங்க.
@########
வீட்டில் இருந்தவர்கள்: ஐயா, எங்க குடும்பம் ரொம்ப கவுரவமான குடும்பம். நீங்கள் எங்களை அசிங்கப்படுத்திப் பேசாதீங்க.
@@#######
உங்கள் வீட்டில் கஞ்சா இருப்பதாக தகவல் கெடச்சுத்தான் நாங்க வந்தோம்.
@@####@@
அதோ அங்க நிக்கிற இரண்டு பேரும் கஞ்சா வாங்க வந்தவங்க தானே?
@@@##@@@
அவன் என் தம்பி. அவள் என் தம்பி மனைவி.
@@######
ஓ... இதை நாங்கள் நம்பணுமா? "கஞ்சாவை எடுத்து வாங்க. நாங்க பார்க்கணும்"னு கேட்டது உண்மையா பொய்யா?
@@#####@
கேட்டார்கள். உண்மை தான்.
@@@@@@@
அப்ப கஞ்சா வியாபாரம் பண்ணறீங்க? அப்படித்தானே?
@@######
ஐயா என் பெண் குழந்தைக்கு மூணு மாசம் ஆகுது. அதைப் பார்க்க என் தம்பியும் அவன் மனைவியும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவாங்க. நாளைக்கு ஊருக்கு போறதாலே இன்னிக்கே வந்துட்டாங்க.
@@@@@@@@
எதுக்கு? கஞ்சா வாங்கவா?
@@@@@@
கஞ்சா வாங்க இல்லீங்க. கஞ்சாவைப் பார்க்க.
@#####
ஓ.... நீங்க விற்கிற கஞ்சா நல்ல சரக்கானு பார்க்கிறதுக்கா?
@#######
ஐயா என் குழந்தை பேரு கஞ்சா. அருமையான இந்திப் பேருன்னு என் தம்பிதான் சொன்னான். யாருமே அவுங்க குழந்தைக்கு வைக்காத பேரேனு அந்தப் பேரை வச்சோம். கஞ்சா தொட்டிலில் தூங்கறா. வந்து பாருங்கள். அவளோட பிறப்பு சான்றிதழையும் காட்டறேன்.
(ஐந்து நிமிடம் கழித்து ஆய்வாளர்:)
ஏம்மா இதை என்ன சொல்லறது? இந்திப் பெயர் வெறி. உன் குழந்தையை வடநாட்டில் கொண்டு போய் படிக்க வச்சா பரவாயில்லை. தமிழ் நாட்டில் எந்தப் பள்ளில சேர்த்தாலும் _'கஞ்சா'ங்கிற பேரோட உங்க பெண் குழந்தை படிக்க முடியுமா? அந்தப் பேரோட ஊரில் நடமாட முடியுமா?
உங்கள் நல்லதுக்குத் தான் சொல்லறேன். குழந்தையோட பேரை மாத்துங்க. அழகான தமிழ்ப் பேரா வையுங்கள்.
@@@###
சரிங்க ஐயா. சிந்திக்காம 'கஞ்சா'ங்கிற பேரை எங்க பொண்ணுக்கு வீச்சுக்கு வெட்கப்படறேன். ஐயா. ரொம்ப நன்றிங்க.
@@@@@@@@@@@@@@@@@#@@@#@@##
Kanja = Bird, A Bird, honouring with row of lights.