பார்க்கும் விழியிரண்டும் பாலைவனச் சோலையோ
பார்க்கும் விழியிரண்டும் பாலைவனச் சோலையோ
தீர்க்குமோ என்நெஞ்சின் தீராக்கா தல்நோயை
மேற்கில் கவிந்திடும் மாலைமென் தென்றல்பூங்
காற்றேநீ கேட்டுவந்து சொல்
பார்த்திடும் பூவிழிகள் பாலைவனச் சோலையானால்
தீர்க்குமோ என்நெஞ்சின் தீராக்கா தல்நோயை
போர்த்தொழில் புன்னகையாள் பூந்தென்ற லேநோயைத்
தீர்த்துவைப் பாளாநீ கேட்டுவந்து சொல்லாயோ
----வெண்பா பாவின கலிவிருத்தமாய் எதுகை மோனை எழிலுடன்
விளம் காய் காய் காய் எனும் ஒரே வாய்ப்பாட்டில அமைந்துள்ளது

