நன்மதி வெண்பா - நூல் - பாடல் 1
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
தருணமுத வாக்கேளிர் தாள்வணங்கு வோர்க்கு
வரமருளாத் தெய்வமன வாஞ்சை - பெரிதுறமேல்
ஊர்ந்தவுட னோடா வுழைப்புரவி நன்மதியே
ஓர்ந்தவர கற்றுவரென் றோது! 1