தமிழ்த்தாய்
யார் அவள்?
ஓர் உயிரின் உருவம் அவள்
எண் எழுத்தின் ஈரானவள்
மூவர்ணக்கொடியின் முழுதானவள்
நான்மறைகளின் அமுதுண்டவள்
ஐம்பூதங்களின் அருளானவள்
அறுசுவைகளின் விருந்தானவள்
ஏழு சுரங்களின் ஊற்றானவள்
எண்திசைகளின் ஈர்ப்பானவள்
ஒன்பது கோள்களின் ஒளியில் உண்டானவள்
மொழியின் கூறுகளில் வேறுபட்ட ஒற்றுமையின் மையம் அவள்
பத்துபாட்டின் பண்ணாணவள்
பதினோராம் திருமறையின் வடிவானவள்
பொழுதுகள் ஈராறிழும் புன்னகை
சிந்தும் புல்லாங்குழல்
நவரத்தினங்களால் மின்னும் பொன்நகை பூட்டிய பூவின் இதழ்
அவள் தான் என் பாரதி கண்ட
பாரதத்தின் தாயானவள்,
தமிழ்த்தாயானவள்.
ச.ஐயப்பன்
பாரதி இலக்கியப் பெருவிழா.