விழி சாளரம்

விழி சாளரம்....!
24 /11 /2023

விழி சாளரம் மூடியதால்
மனக் கதவுகள் திறந்தது.
திறந்த கதவுகள் வழியே
கனவுப் பாதைகள் விரிந்தது.
விரிந்த பாதைகளில் பல
முகமில்லா உருவங்கள் சுற்றியது.
சுற்றிய உருவங்களின் நடுவே
ஒருமுகம் முழுதாய்த் தெரிந்தது.
தெரிந்த முகமும் உந்தன்
சிரித்த முகமாய் பதிந்தது.
பதிந்த உன்முகமும் எந்தன்
நினைவில் நிலையாய் நின்றது.
நின்ற என்நினைவும் நீங்காமல்
என்னை நித்தமும் கொன்றது.
கொன்ற உன் நினைவும்
நிறைத்தது என்விழி சாளரத்தை....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Nov-23, 6:08 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 71

மேலே