திருக்குறளைத் திருத்தும் கோமான்களும் கோமாட்டிகளும்

கட்டுரை - எண்ணங்கள்.
"குறளைத் திருத்தும் கோமான்களும் கோமாட்டிகளும்"

இணையத்தில், யூட்யூப்பில் இப்போதெல்லாம் அடிக்கடி, ஒரு சில "தமிழரிந்த பெருமான்களும் பெருமாட்டிகளும்" செய்யும் அரைகுறை மேதாவித்தன அலட்டல்கள் பதிவேற்றப் படுகின்றன.

இந்தத் "தமிழரிந்த ("அறிந்த" இல்லை!) பெருமான்களும் பெருமாட்டிகளும்" தங்களைத் தாங்களே, தங்களுக்கு வரும் யூட்யூப் கம்மெண்ட்களையும் வியூ கவுண்ட்களையும் வைத்து, ஒரு "தமிழுலக வாத்தியார் மனப்பான்மை" யுடன் தமிழை "அரிவதற்கு" வந்து விடுகிறார்கள்.
"திருக்குறளில் பெண்ணியத்திற்கு எதிரான பல கருத்துக்கள் இருக்கின்றன. எனவே நவயுகத்திற்கேற்ப அதைத் திருத்த வேண்டும்",
"குறுந்தொகையில் ஆணாதிக்க மனப்பானைமையைத் தூண்டும் பல பாடல்கள் உள்ளன. அவற்றை நீக்கித் திருத்த வேண்டும்",
"கம்ப ராமாயணத்தில் அறிவியலிற்கும் நடைமுறை வாழ்விற்கும் பொருந்தாத கருத்துக்களும்
மூட நம்பிக்கைகளைக் கொண்ட கருத்துக்களும் உள்ளன. அவற்றை நீக்க வேண்டும்"
என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி அளந்து விடுகிறார்கள்!
அவற்றை அப்படிப் பார்த்துப் பார்த்து மனம் வெதும்பிப் போய் இக்கட்டுரையைப் பதிக்கிறேன். ஒரு ஆண்டு அல்ல ஒரு பத்தாண்டு அல்ல ஒரு நூற்றாண்டு அல்ல இருபத்தைந்து நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் காப்பியங்களையும் இலக்கியங்களையும் காவியங்களையும் சங்கத் தமிழ் நூல்களையும் திருத்த இவர்கள் யார்? இவர்கள், அந்தந்த நூல்களைப் படைத்த ஆசிரியர்களுக்கும் புலவர்களுக்கும் மகாகவிகளுக்கும் முன்னால் தோன்றி அவர்களைத் திருத்தி அமைக்க இன்றும் இருக்கும் மாகா மேதைகளா என்ன?

தமிழ் இலக்கியங்களும் காப்பியங்களும் காவியங்களும் அந்தந்தப் படைப்பாளர்களின் குழந்தைகள்! அவற்றின் மூக்கு சரியில்லை,
பார்வை சரியில்லை,
குரல் சரியில்லை,
நிறம் சரியில்லை என்று அவற்றைத் திருத்திச் செதுக்க இவர்களுக்கு உரிமை இல்லை.
*****************************************************************************
வணக்கம் அண்ணா!
எமது இத்தனை ஆண்டு வாழ்வில்,
திருக்குறளின் வழியில் மட்டும் வாழ்ந்து வரும் வாழ்வில் இன்று இக்கணம் வரை,
உங்களுடைய பனைப்பான இதைப் போன்ற ஒரு
ஆழ்ந்த,
நீண்ட,
அகலமான,
தீர்க்கமான,
தெளிவான,
துல்லியமான,
ஆனால் அரைகுறைப் பிறவி போன்ற
முடக்கு வாத ஆய்வினைக் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை; படித்ததும் இல்லை!
இந்தப் பதிவு எப்படி எங்களது கண்ணில் படாமல் இரண்டாண்டுகளாக இருந்தது என்பது வியப்பாக உள்ளது!

திருக்குறள் வெறும் எழுசொல் குறள் வெண்பா அல்ல தெரியுமா
ஒவ்வொரு சொல்லும் மிகவும் ஆழ்ந்த மிகவும் நுட்பமான உட்கருத்தை உள்ளடக்கமாகக் கொண்டது.
அதாவது, அறம் பொருந்திய சொற்களைக் கொண்டது! வெறும் வார்த்தை ஜாலக் கவிதை அல்ல! அதனால்தான்
அவ்வை, அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று 1332ஆவது குறளைத் தந்தார்!

அவ்வையின் இந்த ஒரு குறளைமட்டும் ஆய்வு செய்தால் போதும் அண்ணா! உமது ஆயுள் போதாது போய்விடும்!
புரிகிறதா பாருங்கள்- அணு, துளைத்தல், ஏழ் கடல், புகட்டுதல், குறுக்குதல், தறித்தல். இவையெல்லாம் இக்காலத்திய "அணுசக்தித் துறை" அறிஞர்களின் பணித் தளங்கள் இல்லையா?
சங்ககாலத் தமிழர்களை, "கற்காலக் காட்டுமிராண்டித் தமிழர்" என்றும் "கற்காலக் காட்டுமிராண்டித் தமிழ் மொழி" என்றும் குறைப் பிறவிக் கசடரான இக்காலத் "தமிழ் அரிஞர்கள்" உளறி எழுதும் அந்தக் கற்(ற)காலத்தில் அவ்வைக்கு எப்படிஅணு, துளைத்தல், ஏழ் கடல், புகட்டுதல், குறுக்குதல்,
தறித்தல் எனும் அணுவிஞ்ஞான நுட்பங்கள் தெரிந்திருந்தன? அதுவும் ஒரு "கற்காலப் பெண்பாற் புலவர்" ஆன அவ்வைக்கு எப்படித் தெரிந்திருந்தன?

முதலில் அணு எனும் சொல் எப்படி அவர்களுக்குத் தெரிந்திருந்தது உருப்பெருக்கு நுண்ணோக்கி அன்று இருந்ததாக அரைவேக்காட்டுக் குறைப் பிறவிகள் ஆகிய மேநாட்டு அஞ்ஞானிமார்' ஆகிய அறிவுத் திருட்டு அஞ்ஞானிமார் ஒத்துக் கொள்ளாத அந்தக் காலகட்டத்தில் இந்த நுட்பம் எப்படி ஒரு அரிய பெண்பாற்புலவரால் கையாளப் பட்டிருக்கிறது?

உங்கள் மனக்குறைப்படி, வள்ளுவப் பெருமான், தமிழகத் தொழிலாளர்களில் விஸ்வகர்மாக்களைப் பற்றி எழுதாமல் மிகவும் வஞ்சித்து விட்டார் என்பது ஒரு பச்சை விளம்பரப் பிச்சைக்காரத் தனமான கருத்து!

ஐந்தொழில்கள் அல்ல அறுதொழில்கள் இருந்த பண்பாட்டுக்காலம் அது.
இந்த அறு தொழில்களில் சிறுதொழில்கள் என்றும் உள்வாராது.
மக்களின் உடல், மனம், உயிர், ஆன்மா, பிறப்பு, இறப்பு ஆகிய ஆறு இறைபடைப்புப் பொருட்களை நேரடியாகப் பாதிக்கும் ஆறு தொழில்களே இன்றியமையாதவை என்பதால் அன்றைய முன்னோர் வகுத்து வைத்த வாழ்வியல் நெறிகள் இவை.
அதுசரி இவ்வளவு
ஆழ்ந்த,
நீண்ட,
அகலமான,
தீர்க்கமான,
தெளிவான,
துல்லியமான ஆய்வை மெனக்கெட்டு நடாத்திய நீவிர்,
சொந்தமாக ஒரு "டமில் லக்கி குருக்குறள்" ஐ ஏன் படைக்கக் கூடாது?
எந்தத் தொழிலாளரையும் வஞ்சிக்காமல் எல்லாரையும் உள்ளிருத்தி ஒரு தொழில்வாரிக் குறளாக ஏன் அதைப் படைக்கக் கூடாது?
அதை, டமில் உல்கம் நன்றாகப் போற்றிக் கொண்டாடும் இல்லையா
வள்ளுவர் எழுதியதை நோண்டி நுழாவித் திருத்துவதை விட இந்த உங்கள் குருக் குறள், திருக்குறளைப் புறந்தள்ளி, உருப்படியாக இன்னும் ஒரு ஐயாயிரம் ஆண்டுக்காலம் நீடித்திருக்கும் இல்லையா

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் - 560.
இது முதலாகப் பல குறட்களின் உட்கருக்களை உணர்ந்து ஆய்க!

அதுசரி, இன்றைக்கு உள்ளவை வெறும் ஆறு தொழில்கள் தானா
எக்காலத்தும் பொருந்தும் அக்காலக் குறள் படைத்த முக்காலப் புலவர் வள்ளுவர்
ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்களை வஞ்சித்து விட்டார் என்னும் உங்கள் கருத்து உண்மையாகவே உண்மைதான்!
ரேடியா மெக்கானிக், வாட்ச் மெக்கானிக், கார் மெக்கானிக் தொடங்கி,
ஏரோப்பிளேன் மெக்கானிக், ராக்கெட் மெக்கானிக் வரை போய்,
டெய்லர், கட்டிங் மாஸ்டர், கலர் மாஸ்டர், பேட்டர்ன் மாஸ்டர், ஒவர்லாக் டெய்லர் வரை,
சரக்கு மாஸ்டர், பரோட்டா மாஸ்டர், சப்ளையர், ஸ்வீட் மாஸ்டர், கிளினர் மாஸ்ட்ட்ர் வரை,
டாக்டர், எஞ்சினீர, வக்கீல், ப்ளீடர், ஜட்ஜ், வெண்டார் - - - கைவலிக்கிறது இல்லை?
-- -- -- -- -- -- -- -- -- -- அடேங்கப்பா! எத்தனை தொழிலாளர் இருக்கின்றனர்
வள்ளுவர் முக்கால ஞானிப் புலவர் என்றிருந்திருந்தால் இவர்களை எல்லாம் உள்ளடக்கி இருக்க வேண்டாமோ
வாள்க டமில் லக்கி குரு!

செல்வப் ப்ரியா - சித்திரைச் சந்திரன் - 26நவம்பர்2023-திங்கட்கிழமை.

எழுதியவர் : சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா. (27-Nov-23, 3:01 pm)
பார்வை : 71

மேலே